ETV Bharat / state

Half naked protest : சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நடத்திய அரை நிர்வாணப்போராட்டம்

author img

By

Published : Jan 12, 2022, 7:27 PM IST

Half naked protest : சேலத்தில், பணி சீருடை வழங்காத உருக்காலை நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் மேற்சட்டை அணியாமல், அரை நிர்வாணத்தில் கையில் தட்டு ஏந்தி, பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

lpf caders protest at salem steel plant
lpf caders protest at salem steel plant

சேலம்: Half naked protest : சேலம் உருக்காலையில் சுமார் இரண்டாயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆயிரம் பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு ஆண்டுதோறும் உருக்காலை நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த பணிச்சீருடை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் உருக்காலை உணவகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் விலையும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட உருக்காலை ஊழியர்கள் அரை நிர்வாணத்தில் கலந்து கொண்டு கையில் தட்டுகளை ஏந்தி பிச்சை எடுக்கும் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, தொழிலாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க: கோயில்களில் வைக்கப்படும் CCTV - கண்காணிக்க அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.