மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கியப் லெனோவோ, ('லெனோவா' என்றும் அழைக்கப்படும்) அதன் தரம் மாறாமல் பல்வேறு ஸ்மார்ட்போன்களை, அப்பெயரிலேயே அறிமுகம் செய்கிறது. இப்போது, இன்னும் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ள லெனோவோ, நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் தங்களின் பிரதான திங்க்-பேட் (ThinkPad) மடிகணினியின் சாயலை ஸ்மார்ட்போன் சந்தையில் புகுத்தியுள்ளது. அந்தவகையில், மோட்டோரோலாவின் திங்க்-போன் 25 (ThinkPhone 25) எனும் மொபைலை பல அம்சங்களுடன் அறிமுகம் செய்து, டெக் சந்தையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லெனோவோ கணினிகள் அல்லது விண்டோஸ் இயங்குதளங்களுடன் இணைந்து செயல்படும் விதத்திலான OS இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படுகிறது. அன்றைய பிளாக்பெர்ரி (Blackberry) ஸ்மார்ட்போனைப் போன்று, வேலை, தொழில் என பல பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்த திங்க்-போன் 25 வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சோனி கேமரா, டெலிஃபோட்டோ லென்ஸ், NFC என பல மேம்பட்ட அம்சங்களை புதிய திங்க்-போன் 25 ஸ்மார்ட்போனில் சேர்த்துள்ளது.
திங்க்-போன் 25 அம்சங்கள் (ThinkPhone 25 Specifications):
- 6.36-அங்குல (inch) 1220 பிக்சல்கள் அடங்கிய 120 Hz, HDR10+ ஆதரவுடன் வரும் pOLED திரை (display) கொடுக்கப்பட்டுள்ளது.
- 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு
- ஐபி68 நீர் பாதுகாப்புக் குறியீட்டுடன் MIL-STD-810H ராணுவத் தர சான்றளிக்கப்பட்ட உறுதியான வடிவமைப்பு
- மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட்
- 8 ஜிபி ரேம், 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் சோனி LYT-700C OIS முதன்மை சென்சார் உடன், 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 3x சூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ OIS சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 4,310 mAh பேட்டரி, 68W சார்ஜிங் ஆதரவு, 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
இதையும் படிங்க |
திங்க்-போன் 25 இந்திய விலை (ThinkPhone 25 Price in India):
helloBUSINESS 👋 — today we introduce the new moto g75 5G and ThinkPhone25 by motorola. Durable design featuring five years of OS and security updates to keep you moving forward.#HelloMoto @motorolaUK pic.twitter.com/oWFQ0NWYoB
— Wilkin Lee (@WilkinLee) September 30, 2024
திங்க்-போன் 25 இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்று இதுவரை நிறுவனம் தகவல் வெளியிடவில்லை. எனினும், பிரிட்டனின் 499 யூரோ மதிப்பை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதம் முதல் திங்க்-போன் 25 மொபைலை மோட்டோரோலா விற்பனைக்குக் கொண்டுவருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.