சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி நகர காவல் ஆய்வாளர் ரத்னகுமார் தலைமையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கோவைக்குச் செல்வதற்காக அதிவேகமாக வந்த ஒரு வேனை வழிமறித்து சோதனையிட்டதில் அதில் ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வேனை பறிமுதல் செய்த காவல் துறையினர், வேனை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த புருசோத்தமன் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விமான இருக்கையில் கேட்பரற்று கிடந்த தங்க நகைகள்.!