கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய- மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த ஊரடங்கு காலத்திலும் ஓய்வின்றி பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் நிவாரணப் பொருள்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் பஞ்சாயத்து பகுதியில், சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நன்றி தெரிவித்து ஊக்கப்படுத்தும் விதமாக, சேலம் வீராணம் காவல் நிலைய காவலர்கள் சார்பில், அரிசி, பருப்பு உள்ளிட்ட 20 வகையான மளிகைப் பொருட்களை உதவி காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் வழங்கினார்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் கொலை - குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு