ETV Bharat / state

'பெரியார் சிலையை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்க..!' - ஜி.கே.வாசன் - சமூக விரோதிகள்

சேலம்: பெரியார் சிலை உடைப்பில் தொடர்புடைய சமூக விரோதிகளை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறை விரைந்து எடுக்க வேண்டும் என்று ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஜிகே வாசன் பரப்புரை
author img

By

Published : Apr 9, 2019, 3:49 PM IST

சேலம் மக்களவைத் தொகுயில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று ஓமலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெரியார் சிலை மட்டுமல்ல எந்தத் தலைவரின் சிலை உடைக்கப்பட்டாலும் அவர்கள் எந்தக் கட்சியை சார்ந்தவர்கள் என்று பார்ப்பதை விட அவர்களை சமூக விரோதிகள் என்று கூறுவதே சரியானது. அப்படிப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறை விரைந்து செயல்பட வேண்டும். அதேபோல வருமானவரித் துறையினர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் அரசு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு செயல்படுகின்றனர்.

வளர்ச்சியை மையப்படுத்தியே பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு நேர்மாறாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நடக்காத ஒன்றை நடத்திக்காட்டும் பொய்யை தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நாட்டில் உள்ள ஏழை எளிய நடுத்தர மற்றும் விவசாய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்துள்ளது.

ஜிகே வாசன் செய்தியாளர்கள் சந்திப்பு

மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் ஜிஎஸ்டி முறை மாற்றி அமைக்கப்படும். விவசாயிகளுக்கு 60 வயது கடந்தவுடன் ஓய்வூதியம் வழங்கப்படும். வட இந்தியாவில் காங்கிரஸ் வலுவிழந்துள்ளது. அதனால்தான் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடுகிறார்.

மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் நலனுக்காகத்தான் ஏழை எளிய மக்களின் நலனுக்காகத்தான் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் வழங்கினார். அதேபோல பல்வேறு நலத் திட்டங்கள் தொடரும் என்று தெரிவித்தார்.

Intro:சேலம் நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று ஓமலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Body:பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது ஜி. கே.வாசன் கூறுகையில்," தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக அமைந்து தேர்தலை சந்திக்கிறது. திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி மக்கள் விரோத கூட்டணியாக இருக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி கொண்டு செல்கிறது. வளர்ச்சியை மையப்படுத்தியே பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. வளமான நாடாக இந்தியா உருவாகிக்கொண்டிருக்கிறது . மேலும் இந்தியாவை பாதுகாப்பான நாடாக உருவாக்க கூடிய சூழலை பாரதிய ஜனதாக் கட்சி உருவாக்கி இந்திய மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதற்கு நேர் மாறாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நடக்காத ஒன்றை நடத்திக் காட்டும் பொய்யை தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நாட்டில் உள்ள ஏழை எளிய நடுத்தர மற்றும் விவசாய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்துள்ளது. மேலும் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் ஜிஎஸ்டி முறை மாற்றி அமைக்கப்படும். விவசாயிகள் 60 வயது கடந்தவுடன் பென்ஷன் வழங்கப்படும். வட இந்தியாவில் காங்கிரஸ் வலுவிழந்து உள்ளது . அதனால் தான் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடுகிறார். 8 வழி சாலை திட்டம் குறித்து குறைகள் இருந்தால் மக்களுக்கு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அதை அதிமுக அரசு செயல்படுத்தும். நீதிமன்றம் என்பது பணக்காரர்களுக்கும் ஏழை மக்களுக்கும் ஒன்றுதான். மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் நலனுக்காக தான் ஏழை எளிய மக்களின் நலனுக்காகத் தான் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் வழங்கினார். அதேபோல பல்வேறு நலத் திட்டங்கள் தொடரும். தமிழகத்திற்கு என்ன தேவை என்பதை கேட்டுப் பெறும் நிலையை மத்திய அரசுடன் இணக்கமான மாநில அரசு இருந்தால்தான் முடியும் . அந்த ஒரு சூழலை அதிமுக உருவாக்கி வைத்திருக்கிறது. மேலும் பெரியார் சிலை மட்டுமல்ல எந்த ஊர் தலைவரின் சிலை உடைக்க பட்டாலும் அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்று பார்ப்பதை விட அவர்களை சமூக விரோதிகள் என்று கூறுவதே சரியானது. அப்படிப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். அதேபோல வருமானவரித்துறையினர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை அவர்கள் அரசு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு செயல்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.

Conclusion:தொடர்ந்து ஜி.கே. வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் வியூகம் என்ற பிரச்சார குறுந்தகட்டை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.