ETV Bharat / state

காதலித்து ஏமாற்றியவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா...! - காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து காதலி தர்ணா

சேலம்: தலைமறைவான காதலனை கண்டுபிடித்து தரக்கோரி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த இளம்பெண், காதலன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து ஏமாற்றிய காதலன் வீட்டின் முன்பு பெண் தர்ணா
author img

By

Published : Aug 31, 2019, 12:43 PM IST

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே எஸ் நாட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா(21). சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர், கல்லூரிக்கு செல்லும் போது அதே ஊரைச் சேர்ந்த தறி தொழிலாளி பூபதி என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பூபதியிடம் கௌசல்யா கூறியுள்ளார்.

காதலன் வீட்டின் முன்பு பெண் தர்ணா

அப்போது, இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். இதனால் திருமணத்திற்கு வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என பூபதி தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கௌசல்யா, பலமுறை பூபதியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் பூபதி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கௌசல்யா தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் பெற்றோர்களால் காப்பாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, காதலுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் கௌசல்யா புகார் அளித்தார். ஆனால், காவல் துறையினர் விசாரிக்காமல் அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, பூபதியின் வீட்டிற்கு கௌசல்யா சென்றபோது வீடு பூட்டியிருந்ததால், வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையறிந்த எஸ் நாட்டமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு சென்று கௌசல்யாவை சமாதானம் செய்தனர்.

அப்போது கௌசல்யா கூறுகையில், என்னை திருமணம் செய்ய மறுத்த பூபதி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என கண்டுபிடித்து தரவேண்டும். என்னை காதலித்து ஏமாற்றிய பூபதியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.

Intro:சேலத்தில் காதலன் வீட்டின் முன் பட்டதாரி பெண் தர்ணா. காவல்துறையினர் உடனே விசாரிக்க வலியுறுத்தினர்.

Body:சேலம் அருகே மாயமான தனது காதலனை கண்டுபிடித்து தர வலியுறுத்தி காதலி காதலன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி அருகிலுள்ளது எஸ் நாட்டமங்கலம் இந்தப் பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா. 21 வயதான கௌசல்யா சேலத்தில் உள்ள சக்திகைலாஸ் கல்லூரியில் பி.ஏ.முடித்து வீட்டில் இருந்து வருகிறார்.

இவர் கல்லூரிக்கு செல்லும் போதும் வரும்பொழுதும் எஸ் நாட்டமங்கலம் தைச் சேர்ந்த தறி தொழிலாளி பூபதி என்பவருடன் காதல் ஏற்பட்டது. கடந்த ஒன்றரை வருடகாலமாக பூபதியும்,கௌசல்யாவும் நெருங்கி பழகி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கௌசல்யா பூபதியை திருமணம் செய்துகொள்ள தெரிவித்தார்.

அப்பொழுது பூபதி இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் இதனால் தனது வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என பூபதி தெரிவித்தார். இதைக் கேட்ட கௌசல்யா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பலமுறை பூபதியை கௌசல்யா சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார் ஆனால் பூபதி தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 4ம் தேதி கவுசல்யா வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இவரை காப்பாற்றிய பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் வீடு திரும்பிய கௌசல்யா தனது காதலுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ஆனால் போலீசார் எதுவும் விசாரிக்காமல் கௌசல்யாவை அனுப்பி வைத்துவிட்டனர். இந்தநிலையில் பூபதி கடந்த சில நாட்களாக வீட்டில் இல்லை அவர் எங்கே சென்று விட்டார். அவரது செல்போனுக்கு கவுசல்யா தொடர்பு கொண்டார் ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. கௌசல்யா பூபதி வீட்டுக்கு வந்து பார்த்தார். வீட்டில் பூபதி இல்லை அவரது பெற்றோரும் இல்லை.

இதனால் கௌசல்யா இன்று காலை 6 மணி அளவில் பூபதியின் வீட்டிற்கு வந்தார் பின்னர் பூபதியின் வீட்டின் முன் படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக எஸ் நாட்டமங்கலம் தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக அங்கு வந்து கௌசல்யாவை சமாதானம் செய்தனர்.

அப்பொழுது கௌசல்யா தனது காதலன் திருமணம் செய்ய மறுத்து எங்கே சென்று விட்டார். அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என தெரியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் தன்னை காதலித்து ஏமாற்றிய பூபதியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றும், இதற்கு காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்று காலை 6 மணி அளவில் கௌசல்யா பூபதி வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் தர்ணா செய்து வருகிறார் இதனால் எஸ் நாட்டமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.