ETV Bharat / state

ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலாளர்கள்! - ஸ்பின்னிங் மில்

சேலம்: ஆத்தூர் அருகே தனியாருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

File pic
author img

By

Published : Jun 11, 2019, 10:38 PM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்கசிவால் திடீரென தீ பற்றி எரிந்தது. பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். அதற்குள் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள், இயந்திரங்கள் எரிந்து நாசமானது.

ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த திடீர் விபத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்ட நிலையில், எஞ்சிய தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து, அப்பெண்ணை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆத்தூர் அருகே தனியாருக்குச் சொந்தமான மினி ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து 

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலாளர்கள் 

15 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்

சேலம்(11.06.2019):
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான LKR மினி ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் பஞ்சை நூலாக மாற்றும் பணி செய்கிறது. 

இந்நிலையில் பணியில் 15க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருந்தார் அப்போது ஏற்பட்ட மின்கசிவால் திடீரென தீ பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த பணியாளர் உடனடியாக வெளியேறினார். அதற்குள் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. 

இதில் வெண்ணிலா என்ற பணியாளருக்கு கை மற்றும் கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது . உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 

பஞ்சாலைப் பணியாளர்கள் வாழப்பாடி தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இந்த விபத்தில் 15 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரம் எரிந்து நாசமானது சம்பவம் குறித்து வாழப்பாடி துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். 

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டமாக  உயிர் தப்பினர். 

தீ விபத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.