சேலம்: ரயில் நிலையத்தில் நான்காவது நடைமேடையில் ரயில்வே தலைமைக்காவலர் மஞ்சு, அஸ்வினி ஆகியோர் நேற்றிரவு (ஜூலை 06) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ரயிலில் சிக்கிய இளைஞர்:
அப்போது, அதிகாலை 1:30 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ஹாட்யாவிலிருந்து எர்ணாகுளம் நோக்கி சேலம் வழியாக சென்று கொண்டிருந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
மீண்டும் புறப்படும்போது ரயிலிலிருந்து குதித்த இளைஞர் ரயிலுக்கு அடியில் சிக்கியுள்ளார். இதனைக்கண்ட பெண் காவலர்கள் இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் துரிதமாக செயல்பட்டு லேசான காயங்களோடு இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
வைரலாகும் சிசிடிவி காட்சி:
அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவன்குமார் என்பதும் சேலம் ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்டபோது ரயில் புறப்பட்டுவிட்டதால் ரயிலிலிருந்து தவறி விழுந்து, கீழே விழுந்ததும் தெரியவந்தது.
துரிதமாக செயல்பட்டு இளைஞரை மீட்ட பெண் காவலர்களை உயரலுவலர்கள் பாராட்டினர். மேலும், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: பிரதமரின் உயிர் காக்கும் விருது - மகிழ்ச்சியில் முதல்நிலை காவலர்