ETV Bharat / state

எஃப்.எம் ரேடியோ வெடித்து விவசாயி உயிரிழப்பு - நடந்தது என்ன? - fm radio blast

சேலம்: பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த எஃப்.எம் வெடித்து சிதறியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

death
death
author img

By

Published : Jun 17, 2020, 9:56 PM IST

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகேயுள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மணி (50). இவர் தனது வீட்டருகே நேற்று (ஜூன் 16) கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூன் 17) நண்பகல் பாட்டு கேட்பதற்காக எஃப்.எம் ரேடியோவை ஆன் செய்தபோது, திடீரென வெடித்து சிதறியது. இதில், பலத்த காயமடைந்த மணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரேடியோ பெட்டி வெடித்தபோது அருகிலிருந்த 12 வயது சிறுமி செளரூபியா மற்றும் வசந்த குமார் (37), நடேசன் (67) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து மூன்று பேரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த 12 வயது சிறுமி செளரூபியா உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ரேடியோவுக்குள் வெடிபொருளா
ரேடியோவுக்குள் வெடிபொருளா?

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பனமரத்துப்பட்டி காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். வெடித்து சிதறிய பொருள் என்ன என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதித்து வருகின்றனர். எஃப்.எம் ரேடியோ பெட்டிக்குள், வெடி பொருள் எப்படி வந்தது என்பது குறித்தும் காவல் துறையினர் தீர விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வனப்பகுதியில் குதறப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.