ETV Bharat / state

போலி சாதி சான்றிதழ் தயாரித்த விவகாரம்; 3 டாக்டர்கள் உள்பட 4 பேருக்கு சிறை... - சிபிசிஐடி காவல்துறை

போலி ஜாதி சான்றிதழ் விவகாரத்தில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போலி சாதி சான்றிதழ் தயாரித்த விவகாரம்
போலி சாதி சான்றிதழ் தயாரித்த விவகாரம்
author img

By

Published : Nov 5, 2022, 11:30 AM IST

சேலம்: மேட்டூர் மற்றும் கொளத்தூர் பகுதியை சார்ந்த நான்கு பேர் ஜாதி சான்றிதழ் போலியாக தயாரித்து உள்ளனர். கடந்த 96-ஆம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்த இந்த நான்கு பேரின் சாதி சான்றிதழ் போலியாக தயாரிக்கப்பட்டது என கண்டு பிடிக்கப்பட்டது.

கொண்டாரெட்டி என்ற சாதி சான்றிதழை இவர்கள் போலியாக தயாரித்ததுள்ளது தெரிய வந்தது. இதனை விசாரிக்க, சேலம் சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

விசாரணையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சார்ந்த ராஜேந்திரன், சென்னை மயிலாப்பூரை சார்ந்த கெளசல்யா, சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சார்ந்த ராஜேந்திர குமார், கொளத்தூரை சார்ந்த லதா ஆகியோர் கொண்டாரெட்டி சாதி சான்றிதழை போலியாக தயாரித்து, இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் சேலம் எண்-4 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யுவராஜ், புகார் கூறப்பட்ட ராஜேந்திரன், கெளசல்யா, ராஜேந்திர குமார், லதா ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டையும், தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று(நவ.04) தீர்ப்பளித்தார்.

ராஜேந்திரன் தற்போது, நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கெளசல்யா சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். ராஜேந்திர குமார் தர்மபுரி தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். லதா தமிழ்நாடு வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிடிஆர் கார் மீது காலணி வீசிய வழக்கு - ஜாமீனிலுள்ள 3 பேருக்கு நிபந்தனை தளர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.