ETV Bharat / state

சேலத்தில் போதை பொருட்கள் இல்லாத 120 கிராமங்கள் அறிவிப்பு: டிஜிபி சைலேந்திரபாபு - போதை பொருட்கள் இல்லாத கிராமம்

சேலம் சரகத்தில் 120 கிராமங்கள் போதை பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி
டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி
author img

By

Published : Nov 7, 2022, 3:27 PM IST

சேலம்: தமிழ்நாடு காவல்துறையில் சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா இன்று (நவ. 7) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

முன்னதாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, செல்போன்கள், இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சைலேந்திரபாபு, சேலம் மாநகரில் தற்போது 40 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாகவும், லாட்டரி விற்பனை மற்றும் போதை பொருட்கள் தடை செய்வதில் சேலம் சரகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் சேலம் சரகத்தில் தற்போது வரை 120 கிராமங்கள் போதை பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், போதைப்பொருள் இல்லாத மாவட்டங்களாக சேலம் சரகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை சமயங்களிலும், பண்டிகை காலங்களிலும் காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது, இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குமரியில் ராஜீவ் காந்தி சிலையை உடைக்க முயற்சி.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.