ETV Bharat / state

'8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது' - திமுக எம்பி வலியுறுத்தல் - சேலம் எட்டு வழிச்சாலை

சேலம்: எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என, சேலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்பி செந்தில் குமார் உறுதியளித்தார்.

dmk mp's meeting with eightway farmers
dmk mp's meeting with eightway farmers
author img

By

Published : Sep 3, 2020, 10:19 PM IST

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த குள்ளம்பட்டி பகுதியில் எட்டு வழிச்சாலை அமைய உள்ள இடத்தில் விவசாயிகள், திமுக எம்பிக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், எட்டு வழிச்சாலை திட்டம் அமைக்கப்பட்டால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அடியோடு அளிக்கப்படும் எனவும், லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்க நேரிடும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சேலம் - சென்னை செல்ல தற்போது பயன்படுத்தப்படும் சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனவும் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் கூறுகையில், "தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று உறுதியாக உள்ளன. இந்த சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பலமுறை திமுக சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கப்பட்டுள்ளது.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் நிலை குறித்து அங்குள்ள ஊராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்து இருக்கிறோம். ஊராட்சி மன்றங்களில் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்றத்திலும் எதிரொலிக்கும். சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு ஏற்கனவே உள்ள உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தால் போதுமானது" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.