சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் - சரஸ்வதி தம்பதி வசித்துவருகின்றனர். இவர்கள் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகின்றனர். இதற்காகப் பல்வேறு இடங்களில் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்... 6 பேர் கைது!