இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் மாணவர்களுக்கான ஒருநாள் வேலைவாய்ப்பு கருத்தரங்கு சேலத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஐடி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மண்டல சிஐஐ அமைப்பினர், "சேலம் மண்டல மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதற்காக மாணவர்களைத் தயார் செய்ய சிஐஐ தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக சேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்ப்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.
இந்தக் கருத்தரங்கில் சேலம் மண்டலத்தைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்கள், ஐடி துறையின் முதல்வர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க: பொய் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - சேலம் விவசாயிகள் மனு