ETV Bharat / state

அறிவியல் கண்டுப்பிடிப்புகளை ஊக்குவிக்கும் பூங்கா - மாநகராட்சி ஆணையர் - அறிவியல் பூங்கா

சேலம்: சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொண்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வுசெய்தார்.

Visit
Visit
author img

By

Published : Nov 3, 2020, 5:39 PM IST

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.965 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் 81 எண்ணிக்கையிலான பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகரப் பகுதிகளில் வசிக்கக் கூடிய குழந்தைகள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனங்களின் செயல் விளக்கங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் மாநகரப் பகுதியில் அறிவியல் பூங்கா அமைத்திட மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் சூரமங்கலம் மண்டலத்திற்குள்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதல் பெற்று ரூ.5 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை நகராட்சி ஆணையர் சதீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சி ஆணையர் ஆய்வு

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் கூறுகையில், “விண்வெளி ஆய்வுகளுக்காக பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி , பி.எஸ்.எல்.வி ராக்கெட் மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. விண்வெளியில் ஏற்படும் சந்திர, சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வினை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 30 பேர் அமர்ந்து காணக்கூடிய கோளரங்கம் அமைக்கப்படவுள்ளது.

சூரிய சக்தி மூலம் செயல்படும் வானொலி சாதனம், ஒளி அலைகளின் இயக்க முறைகள், கியர்களின் வகைகள், மணிக் கூண்டின் செயல்பாடுகள், கியர் ரயில்கள் உள்ளிட்ட 18 வகையான அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள், அவற்றின் செயல்முறை விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

குழந்தைகள், இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்வரங்கில் கண்டுபிடிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. டைனோசர் போன்ற அரிய விலங்குகள் தொடர்பான தகவல்களுடன் அவற்றின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளது. உள்அரங்கில் 18 வகையான அறிவியல் சார்ந்த பொருள்களின் கண்காட்சி, விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படவுள்ளது.

வாகன நிறுத்தம் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இவ்வளாகத்தில் ஏற்படுத்தப்படும்” என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது உதவிப்பொறியாளர்கள் டி.அன்புச்செல்வி, எம்.பாலசுப்ரமணியம், சுகாதார ஆய்வாளர் எஸ்.சதீஸ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.