ETV Bharat / state

வீடு வீடாக சென்று சுகாதாரத் துறையினர் கரோனா ஆய்வு - சுகாதாரத்துறை ஊழியர்கள்

சேலம்: கரோனா குறித்து வீடு வீடாக சென்று சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆய்வு மேற்கொள்வது குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது.

inspection teகரோனா ஆய்வு மேற்கொள்ள இருக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்ams
inspection teamகரோனா ஆய்வு மேற்கொள்ள இருக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்s
author img

By

Published : Mar 30, 2020, 7:30 AM IST

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பல்வேறு பகுதிகளில் பரவி வருகின்றது . இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சேலத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியவர்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளை எவ்வாறு மருத்துவ பரிசோதனை ஆய்வு செய்வது என்பது குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட துணை இயக்குனர் நிர்மல்சன், சேலம் மாநகர மக்கள் நல அலுவலர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கரோனா ஆய்வு மேற்கொள்ள இருக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்

மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து 450 மருத்துவர்கள், செவிலியர்கள், தனித்தனி குழுக்களாக சென்று 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் கரோனா தொற்று குறித்த ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேலும் இந்தக் கூட்டத்தில் சுகாதார செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட இணை இயக்குனர் நிர்மல்சன் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், அரசு ஆரம்ப சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.