சேலம்: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக வெகுவாகக் குறைந்துவருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 693 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் கூறியதாவது, “கொளத்தூரில் 7 பேர், வீரபாண்டியில் 23 பேர், மேச்சேரியில் 10 பேர், தாரமங்கலத்தில் 16 பேர், வாழப்பாடியில் 17 பேர், காடையாம்பட்டியில் 14 பேர், மேட்டூர் நகராட்சியில் 10 பேர், கெங்கவல்லியில் 7 பேர், ஆத்தூர் நகராட்சி, நங்கவள்ளியில் தலா 9 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 8 பேர், கெங்கவல்லி, ஏற்காடு, கொளத்தூரில் தலா 7 பேர், கொங்கணாபுரம், தலைவாசலில் தலா 6 பேர், பனமரத்துப்பட்டி, நரசிங்கபுரம் நகராட்சியில் தலா 5 பேர் என மாவட்டத்தைச் சேர்ந்த 501 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெளிவட்டங்களைச் சேர்ந்த 192 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 1,456 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதேசமயம் ஆறாயிரத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை 81 ஆயிரத்து 608 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 74 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை முடிந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரேநாளில் 18 பேர் உயிரிழந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,307 ஆக அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’மாதம் 10 லட்ச ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை’ - கைதான ’பப்ஜி’ மதனின் மனைவி கிருத்திகா வாக்குமூலம்!