ETV Bharat / state

கல்லூரியில் மாணவன் திடீர் மரணம்..! போலீஸ் விசாரணை..!

College Student dead: ஓமலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மயங்கி விழுந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரியில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவன் பலி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 4:39 PM IST

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமம் அடுத்த தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் விஜய்சாரதி, ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் (EEE) படித்து வந்துள்ளார்.

வழக்கம் போல நேற்று கல்லூரிக்கு வந்த இவர், திடீரென கல்லூரி வளாகத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் கல்லூரிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் மாணவர் விஜய்சாரதியின் உடலை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

அதனை அடுத்து மறைந்த விஜய்சாரதியின் பெற்றோர், தங்கள் மகனின் இறப்பு குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது மாணவனின் காலில் பெரிய வெட்டுக்காயம் இருந்ததாகவும், அவராக மயக்கமடைந்து விழுந்திருந்தால் வெட்டுக்காயம் எப்படி வரும் என்று பெற்றோர் மற்றும் மாணவனின் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர் விஜய்சாரதி மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன் குண்டு வீச்சு: கருக்கா வினோத்தை 7 நாள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.