ETV Bharat / state

எடப்பாடியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

author img

By

Published : Dec 19, 2020, 12:32 PM IST

Chief Minister Palanisamy started the election campaign  Chief Minister Palanisamy started the election campaign in salem  2021 Tamilnadu election campaign  Chief Minister Palanisamy  முதலமைச்சர் பழனிசாமி  2021 தேர்தல் பரப்புரை  சேலம் மாவட்டச் செய்திகள்  Tamilnadu Current News  தமிழ்நாடு தற்போதைய செய்திகள்  Salem District News
Chief Minister Palanisamy started the election campaign

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில், அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டிவருகின்றன. அதனடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதாக தெரிவித்திருந்தார்.

பரப்புரைத் தொடக்கம்

அதன்படி, இன்று சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்துவிட்டு பரப்புரையைத் தொடங்கினார். முன்னதாக சென்றாயப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பலத்த பாதுகாப்பு

இதன் காரணமாக அப்பகுதியில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், கோவை மண்டல ஐஜி பெரியய்யா தலைமையில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் பரப்புரைக்கு என தனியாக வடிவமைக்கப்பட்ட வாகனம் கொண்டுவரப்பட்டு அந்த வாகனத்தில் பரப்புரையைத் தொடங்கினார்.

இதையும் படிங்க: 2021 தேர்தல்: சொந்த மாவட்டத்திலிருந்து இன்று பரப்புரையைத் தொடங்கும் முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.