ETV Bharat / state

மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது - fraud

சேலம்: தூய்மை இந்தியா திட்டத்தில் பொதுமக்களிடம் நலத்திட்டம் பெற்று தருவதாகக் கூறி பணம் பறிக்க முயன்ற சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

YOUTH
author img

By

Published : Jun 7, 2019, 8:34 AM IST

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் பார்த்திபன் (22). இவர், நேற்று மாலை கன்னங்குறிச்சிக்கு வந்தார். பின்னர் அவர் தன்னை தூய்மை இந்தியா திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வாங்கித்தரும் அலுவலர் எனக் கூறியுள்ளார்.

இதன் பிறகு, கன்னங்குறித்து பொதுமக்கள் சிலரை அணுகி நலத்திட்டங்கள் வேண்டுமா ? எனக் கேட்டுள்ளார்.
இதில், சிலருக்குப் பார்த்திபன் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, பார்த்திபனை கன்னங்குறித்து பேரூராட்சி அலுவலகத்துக்குப் பொதுமக்கள் அழைத்துச் சென்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஆறுமுகநயினார் இருந்தார்.

அவர் பார்த்திபனிடம் விசாரித்தபோது, பார்த்திபன் தூய்மை இந்தியா திட்டத்தில் நல உதவிகள் பெற்றுத் தர வந்துள்ளதாகவும், பொதுமக்களைச் சந்தித்து யார் யாருக்கு நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தரலாம் என விவாதிக்க வந்திருப்பதாகவும் தனக்கு லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தருமாறும் செயல் அலுவலரிடம் கேட்டுள்ளார்.

ஆனால்,பார்த்திபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, "அடையாள அட்டை, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா?" என பார்த்திபனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பார்த்திபன் தன்னிடம் தற்போது எந்த அடையாள அட்டையும் இல்லை என்றும், சென்னையிலிருந்து வரும் அவசரத்தில் அடையாள அட்டையை எடுத்து வர மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனால், மேலும் சந்தேகம் அடைந்த ஆறுமுகநயினார் பார்த்திபனை பிடித்து வைத்துக்கொண்டு கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளருக்கு புகாரளித்தார்.

இதனையடுத்து, காவல்துறையினர் பார்த்திபனிடம் விசாரித்தனர். அப்போது, பார்த்திபன் போலி அலுவலர் என்பது தெரியவந்தது. பின்னர், அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Salem 6.6.2019
M.kingmarshal stringer 

சேலத்தில் மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது 

தூய்மை இந்தியா திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதாக கூறி பணம் பறிக்க முயற்சி.

தூய்மை இந்தியா திட்டத்தில் பொதுமக்களிடம் நலத்திட்டம் பெற்றுத் தருவதாக கூறி பணம் பறிக்க முயற்சித்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் பார்த்திபன். (வயது 22).

 இவர் நேற்று மாலை கன்னங்குறிச்சிக்கு  வந்தார் .பின்னர் அவர் தன்னை தூய்மை இந்தியா திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வாங்கித்தரும் அதிகாரி என கூறினார்.

 பிறகு கன்னங்குறிச்சி பொதுமக்கள் சிலரை அணுகி நலத்திட்டங்களுக்கு பெற்றுத்தர வேண்டுமா? என கேட்டார் .
அப்போது பொதுமக்கள் சிலருக்கு பார்த்திபன் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

 பிறகு பார்த்திபனை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அழைத்துச் சென்றனர் .

பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அதிகாரி ஆறுமுகநயினார் இருந்தார்.

 அவர் பார்த்திபனிடம் விசாரித்தார் .அப்போது பார்த்திபன் தூய்மை இந்தியா திட்டத்தில் நல உதவிகள் பெற்று தர வந்துள்ளதாகவும், பொதுமக்களை சந்தித்து யார் யாருக்கு நலத்திட்ட உதவிகள் பெற்று தரலாம் என விவாதிக்க வந்திருப்பதாகவும் தனக்கு லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தருமாறும் செயல் அதிகாரி ஆறுமுகநயினாரிடம் பார்த்திபன் கூறினார். 

இதை கேட்டசெயல் அதிகாரி ஆறுமுகநயினார் பார்த்திபன் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால் அடையாள அட்டை மற்றும் வேறு ஆவணங்கள் உள்ளதா? என கேட்டார். 
 அதற்கு பார்த்திபன் தன்னிடம் தற்போது எந்த அடையாள அட்டையும் இல்லை. சென்னையில் வீட்டில் இருக்கிறது .வரும் அவசரத்தில் அடையாள அட்டையை எடுத்து வர மறந்து விட்டதாக பார்த்திபன் தெரிவித்தார். 

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த செயல் அதிகாரி ஆறுமுகநயினார் பார்த்திபனை பிடித்து வைத்துக்கொண்டு கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர்களுக்கு புகார் செய்தார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் தங்கவேலு மற்றும் காவலர்கள் கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் சென்றனர் .அங்கு பார்த்திபனிடம் விசாரித்தனர் .அப்போது பார்த்தீபன் போலி அதிகாரி என தெரியவந்தது .பின்னர் பார்த்திபன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது .

இதன் பின்னர் பார்த்திபன் கைது செய்யப்பட்டார் .

பிறகு பார்த்திபன் இன்று சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.