ETV Bharat / state

மதுபோதையில் காரை இயக்கி விபத்து - சி.சி.டி.வி காணொலி வெளியீடு - Salem accident CCTV footage release

சேலம்: மதுபோதையில் காரில் வந்தவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் அதிலிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சி.சி.டி.வி காணொலி
விபத்தை ஏற்படுத்திய காரின் சி.சி.டி.வி காணொலி
author img

By

Published : Feb 5, 2020, 2:56 PM IST

சேலம் அம்மாபேட்டை குலசேகர ஆழ்வார் தெருவில் ஹரி - தவமணி தம்பதி வசித்து வருகின்றனர். கடந்த இரண்டாம் தேதியன்று அவர் தனது குடும்பத்துடன் இரண்டு இருசக்கர வாகனங்களில் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடுதிரும்பினார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கமலக்கண்ணன், சுதர்சனன் ஆகியோர் மதுபோதையில், தங்களது காரை இயக்கி ஹரி குடும்பத்தினர் மீது மோதினர்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சி.சி.டி.வி காணொலி

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹரி, அவரது குழந்தைகள் பிரகாஷ், விஷ்ணு, பிரகவ் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் அவரது மனைவிக்கு கால் நசுங்கியதால் 16 தையல்களுடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தின் சி.சி.டி.வி காணொலியானது தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: லாரியின் மீது கார் மோதிய விபத்து - 12 பேர் உயிரிழப்பு!

Intro: மது போதையில் காரை இயக்கி விபத்து

நின்று கொண்டிருந்த பைக் மீது கார் மோதியதில் பெண் படுகாயம்

நெஞ்சை பதற வைக்கும் சி சி டி வி காட்சிகள் வெளியாகியதுBody:
சேலத்தில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பைக் மீது கார் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்த அவர் காரை ஓட்டியவர் மது போதையில் இருந்ததால் விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

கார் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சேலம் அம்மாபேட்டை குலசேகர ஆழ்வார் தெருவில் ஹரி தவமணி தம்பதி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதியன்று குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு அவர்கள் வீடு திரும்பினர்.

த வீட்டு வாயிலில் தங்களது இரண்டு சக்கரவாகனத்தை நிறுத்திய போது, அதே பகுதியை சார்ந்த அரசு ஊழியரான கமலக்கண்ணன் மற்றும் சுதர்சனன் மது போதையில், தங்களது காரை இயக்கியதால், கார் எதிர்பாராத விதமாக ஹரி தவமணி அமர்ந்து இருந்த இரு சக்கரவாகனத்தில் மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹரி, குழந்தைகள் பிரகாஷ்,விஷ்ணு,
பிரகவ் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

தவமணி கால் நசுங்கி பலத்த காயமடைந்ததால் காலில் 16 தையல்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Conclusion:வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பைக் மீது தாறுமாறாக கார் மோதிய சம்பவத்தின் சி சி டி வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.