கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நாளை (20ஆம் தேதி) திங்கள்கிழமை முதல் சேலம் மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டுவரும் உழவர் சந்தை அம்மா உணவகம், மண்டல அலுவலகத்தில் உள்ள அம்மா உணவகம், தண்ணீர் தொட்டி அம்மா உணவகம், குமாரசாமிபட்டி அம்மா உணவகம், வெங்கடப்பன் சாலை அம்மா உணவகம், அரசு மருத்துவமனை அம்மா உணவகம், ராஜேந்திர சத்திரம் அம்மா உணவகம், ஆற்றோரம், மார்க்கெட் அம்மா உணவகம், ஜோதி திரையரங்கு சாலை அம்மா உணவகம், மணியனூர் அம்மா உணவகம், கருங்கல்பட்டி அம்மா உணவகம் ஆகிய 11 அம்மா உணவகங்களிலும்,
ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி மற்றும் மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும், காலை, மதியம் வேளைகளில் உணவருந்தும் அனைவருக்கும் உண்டான உணவு கட்டணத்தினை சேலம் புறநகர், மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 200 பேருக்கு உணவு சமைத்துப் பரிமாறிய துணை முதலமைச்சர்!