ETV Bharat / state

சட்டப்பேரவையில் கலைஞர் படம் - பாஜக வரவேற்பு - dmk

சட்டப்பேரவையில் கலைஞர் படம் வைக்கப்பட்டுள்ளதை, அரசியல் காரணங்களையும் தாண்டி கலைஞர் தமிழ் பற்றாளர் என்ற வகையில் பாஜக வரவேற்கிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை
author img

By

Published : Aug 3, 2021, 8:51 PM IST

சேலம்: சங்ககிரி பகுதியில் தீரன் சின்னமலையின் 217ஆவது நினைவு நாளையொட்டி, அவரின் திருவுருவப் படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கும், பொல்லானுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

பாஜக வரவேற்பு

சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் படம் வைப்பது வழக்கமான விஷயம்தான். கலைஞர் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ளதை, அரசியல் காரணங்களையும் தாண்டி கலைஞர் தமிழ் பற்றாளர் என்ற வகையில் பாஜக வரவேற்கிறது.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் அரசியல் நாகரிகம் அறிந்து பேச வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கண்டிப்பாக பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். 1956 சட்டப்படி மேகதாதுவில் அணை கட்ட சட்டப்படி சாத்தியமில்லை.

உண்ணாவிரதப் போராட்டம்

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கர்நாடக அரசியல் தலைவர்களுக்கு வலியுறுத்தும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி பாஜக சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்." என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுதந்திர தின விழாவில் இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்கள்; பிரதமர் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.