சேலம்: தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது 17 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி நேற்று (செப். 21) போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்துக்குப் பின்னர் சங்கப் பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி பேசுகையில், "தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா கால நிவாரண ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அளவில் வேலைநிறுத்தம்
வாடிக்கையாளர்கள் கிராம வங்கி சேவையைப் பயன்படுத்த தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்திட வேண்டும். வங்கியின் மாற்றுத்திறனாளி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை வங்கி வளாகத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும்.
மொத்தம் 17 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகின்ற 28ஆம் தேதி, தமிழ்நாடு அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: ரூ.1597.59 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்