மாநில தகவல் ஆணையர்கள், வழக்குரைஞர்கள் எஸ். முத்துராஜ், தமிழ்குமார் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் ஆணையத்தின் மூலம் தகவல் பெற விரும்பி விண்ணப்பித்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், பிற அரசு பொதுத் துறை அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் பல்கலைக்கழகம் தொடர்பான ஆறு மனுக்கள், பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக 16 மனுக்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை தொடர்பான 15 மனுக்கள், குடிநீர் வடிகால் வாரியம் தொடர்பான ஒரு மனு, நகராட்சி நிர்வாகம் தொடர்பான 15 மனுக்கள், பேரூராட்சிகள் துறை தொடர்பான 30 மனுக்கள் என மொத்தம் 83 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன்கீழ் தகவல் கோரும் மனுதாரர்கள் கேட்கும் தகவல்களை உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாத பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் மீது தகவல் அறியும் உரிமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :தண்ணீர் கேட்பதுபோல் நடித்து செயின் பறிப்பு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை