ETV Bharat / state

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 'ஆணழகன்' பட்டம் வழங்கும் காவல் துறை - police corona awareness

சேலம்: முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளுக்கு அஸ்தம்பட்டி காவல் துறையினர் ஆணழகன் பட்டம் வழங்கி நூதன தண்டனை அளித்தனர்.

சேலம் அஸ்தம்பட்டி காவல் துறையினர்  salem police awareness  salem recent news  police corona awareness  அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்தன்
முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு 'ஆணழகன்' பட்டம் வழங்கும் காவல் துறை
author img

By

Published : May 3, 2020, 11:21 AM IST

சேலத்தில் 144 தடை உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

சேலம் அருகேயுள்ள அஸ்தம்பட்டி பகுதியில், முகக்கவசம் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை பிடித்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர், அவர்களுக்கு ஆணழகன் பட்டம் அளித்து சாலையோரம் சிறிது நேரம் நிறுத்தி வைத்து நூதன தண்டனையை வழங்கிவருகின்றனர்.

முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல் துறையினர் வழங்கிய நூதன தண்டனை

இதனால், அதிர்ச்சிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணியாமல் இனி வெளியே வரமாட்டோம் என காவல்துறையினரிடம் உறுதியளிக்கின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் வழக்கும் பதிவு செய்தனர்.

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்ற நூதன தண்டனை வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: 'மதயானைக் கூட்டம் ஓவியா ராகிங் காட்சி' போல் வாகன ஓட்டிகளுக்கு தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.