ETV Bharat / state

ஷேர் டிரேடிங் - கோடிக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞர்கள் கைது - Salem Cash fraud

சேலம்: இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி சேலத்தில் 1,500க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

those involved in fraud
மோசடியில் ஈடுபட்டவர்கள்
author img

By

Published : Feb 20, 2020, 8:31 AM IST

சேலம் இட்டேரி சாலையில் டிஎன்ஏ என்டர்பிரைசஸ் என்ற பெயரில் தினகர் அன்பரசு, கந்தகுமார் ஆகியோர் ஷேர் டிரேடிங் தொழில் செய்துவருகின்றனர். இத்தொழிலில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 40 ஆயிரம் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி 1500க்கும் மேற்பட்டோரிடம் இவர்கள் இருவரும் ரூ.31.47 கோடி பணம் வசூல் செய்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்டவர்கள்

இதில் முதலில் பணம் செலுத்தியோருக்கு ரூ.15 கோடி வரை பணத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளனர். அதற்கு பின்னர் பணம் செலுத்தியவர்களுக்கு ரூ.15 கோடியை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் ரூ.2.27 கோடி முதலீடு செய்த மெய்யனூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட தினகர் அன்பரசு, கந்தகுமார் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். இதற்கிடையில், சேலம் அருகே அரியானூரில் அவசர பணத்தேவைக்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கார்த்திக் ராஜா எனும் இளைஞரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இச்சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில், அதிக லாபம் கிடைக்கும் எனும் ஆசையில் இது போன்ற நிறுவனங்களில் பொதுமக்கள் யாரும் பணம் கட்டி ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பிரபல கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு - காவல்துறை தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.