அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குலோத்துங்க நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் மகன் விமல்ராஜ் (24). இவர் பால் வியாபாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில், குலோத்துங்க நல்லூரில் வாகன சோதனை செய்த துணை ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான காவலர்கள், தெருவில் சில வீடுகளின் திண்ணையில் சேலைகள் கிடந்ததைக் கண்டனர். பின்னர், அவற்றை ஆய்வு செய்த காவல் துறையினர் அச்சேலைகளினுள் ஏணி சின்னம் பதித்த சீட்டு ஒன்றும் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு ஆகியவை அடங்கிய பை ஒன்றும் இருந்து தெரியவந்தது.
"இதை யார் வைத்தது? இதை யார் உங்களுக்கு வழங்கியது?" என காவல் துறையினர் கேட்ட பொதுமக்கள் தங்களுக்கு தெரியாது என பதிலத்தினர். சிறிது நேரத்தில் பால் வியாபாரி தான் கொடுத்துள்ளார் என்பது தெரியவர, அவரை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், விமல்ராஜை மீன்சுருட்டி காவல்நிலையத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க : பூனை நடைபோட்ட யானைகள்!