சேலம்:(Announcement of farmers struggle demanding waiver of Co-operative loans): விவசாயிகளின் அனைத்து கூட்டுறவு கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை, தற்போது வரை நிறைவேற்றவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் கூறுகையில்,
"கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்தது.
அதன் பெயரில் அரசாணையும் வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யப்பட்டது.
குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யாமல், விதிமீறல் இருப்பதாகக் கூறி கடனை, மீண்டும் திரும்பிச்செலுத்தும் படி வங்கி அலுவலர்கள் விவசாயிகளை நெருக்கடி செய்து, புதிய கடன்களையும் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர் .
இதையும் படிங்க: 'அடுத்தாண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் மேல்நிலைப்பள்ளிகளில் சுழற்சிமுறை ரத்து'