ETV Bharat / state

கணவரின் ஆசிட் வீச்சில் மனைவி உயிரிழப்பு - சேலம் ஆசிட் வீச்சு சம்பவம் ‘

சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் வீசிய திராவகம் பட்டு படுகாயமடைந்த மனைவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

acid attack lady died in selam  selam acid attack  acid attack  husband pour acid on his wife  selam news  selam latest news  acid  சேலத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்  மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்  சேலத்தில் ஆசிட் வீச்சி  கணவரின் ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த மனைவி  கணவரின் ஆசிட் வீச்சில் மனைவி உயிரிழப்பு  ஆசிட் வீச்சி  சேலம் செய்திகள்  சேலம் ஆசிட் வீச்சு சம்பவம் ‘  சேலம் ஆசிட் வீச்சி விவகாரம்
மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்
author img

By

Published : Aug 31, 2021, 12:58 PM IST

சேலம்: குகை பகுதியைச் சேர்ந்தவர்கள் இயேசுதாஸ் (51) - ரேவதி (47) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரேவதிக்கும், இயேசுதாஸுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

இதனால் ரேவதி, சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். கணவரின் நடவடிக்கைகள் பிடிக்காத நிலையில் அவருடன் சேர்ந்து வாழ ரேவதிக்கு விருப்பமில்லாமல் இருந்துவந்தது.

திராவக வீச்சு

ஆகையால் நேற்று (ஆகஸ்ட் 30) சேலத்தில் வழக்கறிஞர் ஒருவர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் பிரிந்துசெல்ல முடிவெடுத்தனர். இதற்காக நாமக்கல்லிலிருந்து ரேவதி அவரது தாயார் ஆராயி ஆகியோர் நேற்று மாலை சேலம் வந்தனர்.

பின்னர் ஊர் திரும்புவதற்காக ரேவதியும், அவரது தாயாரும் பழைய பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இயேசுதாஸ், தான் மறைத்துவைத்திருந்த திராவகத்தை ரேவதி மீது ஊற்றிவிட்டு தப்பி ஓடினார்.

இதில் ரேவதியின் முகம், மார்பு உள்ளிட்ட உடலின் முன் பகுதிகள் கருகி அவர் படுகாயம் அடைந்தார். வலி தாங்காமல் ரேவதி கூச்சலிட்டு கதறி அழுதார்.

மனைவி உயிரிழப்பு

இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ரேவதியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஆகஸ்ட் 31) காலை உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரேவதி மீது திராவகம் வீசிய இயேசுதாஸை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரைக் கைதுசெய்தனர். இத்தகைய கொடூரமான சம்பவம் குறித்து, இயேசுதாஸிடம், சேர்லம் டவுன் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன், டவுன் காவல் ஆய்வாளர் சம்பங்கி உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: காதலியை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞன்: கேரளாவில் பயங்கரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.