ETV Bharat / state

காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. சேலம் பெண் செய்த தரமான செயல்! - காதலி தர்ணா

சேலத்தில் காதலித்து ஏமாற்றிய காதலனின் வீட்டு முன்பு காதலி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா
காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா
author img

By

Published : Nov 20, 2022, 5:54 PM IST

சேலம்: ஆத்தூர் வடக்கு உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா. இவர், சேலம் மாநகர் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவரை கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதலுக்கு இருரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பெற்றோருக்கு தெரியாமல், சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னர் கோகுல்ராஜ், சுகன்யாவை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் சுகன்யா, பள்ளப்பட்டி பகுதியிலுள்ள கோகுல்ராஜ் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுகன்யாவின் தர்ணா போராட்டத்தால் அதிர்ச்சியடைந்த கோகுல்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். ஆனாலும், சுகன்யா வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையறிந்த கிச்சிப்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா

பின்னர், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சுகன்யாவை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீனவர் மீது கும்பல் தாக்குதல்: மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.