ETV Bharat / state

TANSCHE Syllabus: 'புதிய மொந்தையில் பழைய கள்' போன்றதா? தமிழக அரசின் புதிய பாடத் திட்டம்.. மூத்த பேராசிரியர்கள் கூறுவது என்ன?

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் (TANSCHE) வெளியிட்டுள்ள புதிய பாடத் திட்டத்தினை அனைத்து பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பையும், அதற்கான காரணத்தையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 22, 2023, 10:16 PM IST

மூத்த பேராசிரியர்களுடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்

சென்னை: தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் (The Tamil Nadu State Council for Higher Education - TANSCHE) புதிய பாடத் திட்டத்தினை அனைத்து பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர்கள் மாநாட்டில் அறிவித்திருந்தார். இது கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் அரதப்பழசான பாடத்திட்டமாகக் கருதப்படும் இது, மாணவர்களுக்கு எந்தப் பயனும் தராது என்பதுடன், யாரால் தயாரிக்கப்பட்டது என்பது பரம ரகசியமாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது. மேலும், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை (National Education Policy 2020) புறவாசல் வழியாகத் திணிக்கும் முயற்சி என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சாமுவேல் ஆசீர் ராஜ் மற்றும் பெ.ரவிச்சந்திரன் ஈடிவி பாரத் உடனான நேர்காணலில் தெரிவித்துள்ளனர்.

புதிய கல்வித் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதை ஒட்டி ஏன் எதிர்ப்பு கிளம்பியுள்ளது?: இது புதிய பாடத் திட்டமே அல்ல. இதில் புதுமையோ, மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கோ எதுவும் இல்லை. 2016ல் அணைத்து பல்கலைக் கழகங்களின் கல்விப் பேரவையினர் இணைந்து உருவாக்கிய பாடத் திட்டம்TANSCHE-ல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை முற்றிலுமாக தவிர்த்து, யார் தயாரித்தது என்றே தெரியாத தரமற்ற பாடத் திட்டத்தைத் திணிக்கிறார்கள்.

இதனை பொது வெளியில் விவாதத்திற்கு வெளியிடவே இல்லை, பல்கலைக்கழகங்களுக்கோ அனுப்பி கருத்துக்கேட்பு நிகழவில்லை. ஏன் தரமற்றது, காலத்திற்கு ஒவ்வாதது என்றால், முதுகலை மாணவருக்கு முதல் பருவத்தில் இருக்க வேண்டியது நான்காம் பருவத்திலும், பிந்தையது முதல் பருவத்திலும் உள்ளது. மேலும் இன்றைய காலத்திற்கேற்ப கல்வி பயில வேண்டியவையும் இல்லை. முதுகலை மாணவர்களுக்கு, எழுத்தர் பணிக்குரிய திறன் மேம்பாட்டுப் பாடங்கள் தேவையற்றவை. துறை சார்ந்த அறிவும், பகுத்தறியும் திறனும் பெறுவதே முதுகலை மாணவர்களுக்கு முக்கியம். அதனை, புறக்கணிப்பது தமிழக மாணவர்களைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்த வழி செய்யாது.

இந்த பாடத் திட்டத்திற்கான காரணம் என்ன?: முதன்மையான காரணம், ஒரு பல்கலையிலிருந்து வேறு பல்கலை செல்லும் மாணவர்களுக்கு (migratory students) சிரமம் இல்லாதவாறு, அணைத்து பல்கலைகளிலும் 75% பாடத்திட்டம் சீரானதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. தமிழகத்தில், அவ்வாறு மாறிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 20 வருடங்களில் 1% அல்லது 2% தான். இது பன்மைத்துவத்தை அகற்றி, ஒற்றைத்தண்மையை உருவாக்குகிறது.

பல்வேறு பல்கலைக்கழகங்களும் (தனியார் பல்கலைகள் அல்லது தன்னாட்சிக் கல்லூரிகள்) விருப்பம்போல் பட்டப்படிப்பு, முதுகலை பிரிவுகளைத் தொடங்கி நடத்துவது போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்குச் சிக்கலைத் தருகிறது. டிஎன்பிஎஸ்சி (Tamil Nadu Public Service Commission - TNPSC) போன்ற அமைப்புகள் அந்த பட்டங்களை வழமையான பட்டங்களுக்குச் சமமானவையாக (equivalence) ஏற்றுக்கொள்ளாத பொழுது, இது நீதிமன்றம் செல்கிறது. (உதாரணம்: B.Sc Biology & Bsc Environmental Biology). இதனைச் சரி செய்ய தரம் உயர்த்துவதே தேவை.

புதிய பாடத்திட்டம் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை அடியொற்றியதா?: ஆம், அதுதான் நடைபெறுகிறது. மனோன்மணியம் பல்கலையில், தாவரவியல் துறை கொண்டுவந்த பாடத்திட்டம், டெல்லி, திருவனந்தபுரம், அழகப்பா, பாரதியார் பல்கலை பேராசிரியர்களின் பங்கேற்போடு தயாரிக்கப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டது - துறைசார்ந்த அறிவும் UPSC போன்ற தேர்வுகளுக்கு ஏற்ற வகையிலும் இருந்தது. அதனை ஓராண்டு கூட நடக்க விடாமல், புதிய பாடத்திட்டம் கொண்டுவருவது ஏன்? வெளிப்படைத்தன்மை இல்லாமல், பேராசிரியர்களைப் புறக்கணித்து நடைமுறைப் படுத்துவது எதற்காக? தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நான் முதல்வன் போன்ற திட்டத்தினால், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவது எந்த அளவுக்கு என்பது இன்னும் சில ஆண்டுகள் பொறுத்தே தெரிய வரும்.

இதன் நோக்கம் என்ன?: அரசு பல்கலை/கல்லூரிகளில் தரமற்ற கல்வி என்றால், வசதி படைத்தவர்கள் தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளுக்குச் செல்ல இது மறைமுகமாக ஊக்குவிக்கும், கல்வி மேலும் தணியார் மயமாகும். மாணவர்களுக்கு Critical Thinking, Inter-Disciplinary Approach இல்லாமல் போகும். தனியார் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் குறைந்த ஊதியத்திற்கு பணியாளர்களை தயார்படுத்தும் செயல்பாடே இது" என

இதையும் படிங்க: 'அன்று ரஜினி, இன்று விஜய் பற்றி கேட்கிறீர்கள், இது தமிழ்நாட்டின் சாபக்கேடு' - திருமாவளவன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.