ETV Bharat / state

மனைவியின் கல்வி கட்டணம் செலுத்த சென்ற கணவர் மீது தாக்குதல் - salem Ponnamma Petta

சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வரும் மனைவியின் கல்வி கட்டணத்தை செலுத்த சென்றபோது தாக்கப்பட்ட கணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 24, 2022, 5:24 PM IST

Updated : Nov 24, 2022, 7:08 PM IST

சேலம் : பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் ஜீவா (21). இவரது மனைவி சினேகா சின்ன திருப்பதியில் உள்ள தனியார் (ஜெய்ராம் கல்லூரி) கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது கல்வி கட்டணத்தை செலுத்துவதற்காக ஜீவா இன்று கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது ஜீவா தொப்பி அணிந்திருந்ததால் அதனை கழட்டுமாறு அலுவலர்கள் கூறியுள்ளனர். அதற்கு ஜீவா தலைமுடி அதிகமாக உள்ளது என்று பதில் அளித்துள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த கல்லூரி சேர்மன் ராஜேந்திர பிரசாத் ஜீவாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன் செருப்பால் அடித்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு ஜீவா சேர்மன் ராஜேந்திர பிரசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட கல்லூரி ஊழியர்கள் ஜீவாவை இழுத்துச் சென்று வேறொரு அறையில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

மனைவியின் கல்வி கட்டணம் செலுத்த சென்ற கணவர் மீது தாக்குதல்

இதனை அறிந்து காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் முன்னிலையிலும் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜீவாவுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளரின் வைரல் வீடியோ!

Last Updated : Nov 24, 2022, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.