சேலம் பொன்னம்மாப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி இளைஞர்கள் இன்று அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்துச் சென்ற இரண்டு பேரைப் பிடித்தனார். அவர்களிடமிருந்து 400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
இதே பகுதியில் ரேவதி என்பவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார் என்றும், அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார். பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.