ETV Bharat / state

'மிஸ்டர் சேலம்' ஆணழகன் போட்டி - 300 இளைஞர்கள் பங்கேற்று அசத்தல்! - சேலம் அண்மைச் செய்திகள்

சேலத்தில் நடைபெற்ற 'மிஸ்டர் சேலம்' ஆணழகன் போட்டியில், 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள்
போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள்
author img

By

Published : Dec 19, 2021, 8:17 PM IST

சேலம்: சேலத்தின் அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் நாற்பதாவது ஆண்டு, சீனியர் ஆணழகன் போட்டி, சேலம் மாநகரின் நான்கு ரோட்டில் உள்ள தனியார் அரங்கில் இன்று (டிச.19) நடைபெற்றது.

இதனை சேலம் மேற்கு சரக காவல் உதவி ஆணையர் நாகராஜ் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

எடை, உயரம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் 20 பிரிவாக நடைபெற்ற இப்போட்டியில், 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மிஸ்டர் சேலம் பட்டம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள்

இப்போட்டியின் வெற்றியாளர்கள் அடுத்த வாரம் திருவள்ளூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

அதில் வெற்றியடையும் வீரர்கள் ஜனவரி 6 மற்றும் 8ஆம் தேதிகளில் தெலங்கானாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க பொதுச் செயலாளர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Cheating case against PT Usha: பி.டி.உஷா மீது மோசடி வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.