ETV Bharat / state

பேரிடர் கால அவசர உதவிக்கு 24 மணி நேர தொலைபேசி எண்கள் அறிவிப்பு! - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: பேரிடர் காலங்களில் பொதுமக்கள் அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய 24 மணி நேர தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியர் சி.ராமன் வெளியிட்டார்.

24-hour-telephone-numbers-for-disaster-relief

author img

By

Published : Oct 22, 2020, 10:49 PM IST

சேலம் மாவட்ட வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் இன்று (அக். 22) தொடங்கிவைத்தார்.

இது குறித்து ஆட்சியர் கூறுகையில்,"சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் சேலம் மாவட்ட தீயணைப்புத்துறை மூலம் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீ விபத்தினை தடுப்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், இப்பயிற்சியினைப் பார்த்து தெரிந்துகொண்ட அனைவரும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

இன்றைய தினம் நடைபெற்ற விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களின் போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள், தீ விபத்துகளின் போது எவ்வாறு அதனை எதிர்கொண்டு விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது ஆகியவை குறித்து செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. மேலும் ஒத்திகை நிகழ்ச்சியின் போது பேரிடர் காலங்களில் மேற்தெரிவித்த அனைத்து பேரிடர்களையும் எதிர்கொள்வது தொடர்பான பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கையேடு, சுவரொட்டிகள் அரசு அலுவலர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை, வெள்ளம் ஏற்படும்போது பொதுமக்கள் அனைவரும் உலர் உணவுகள், குடிநீர் மற்றும் ஆடைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் மற்றும் தீவனத்துடன் வீட்டு மிருகங்களையும், மாடுகள், வண்டிகள், விவசாய உபகரணங்கள் போன்றவற்றை பாதுகாப்பான இடத்திற்கோ அல்லது மேடான பகுதிக்கோ கூட்டிச் செல்ல வேண்டும்.

மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றை முதலில் துண்டித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும், தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்து ஏற்பட்டால் வீட்டில் உள்ள தப்பிக்கும் வழிகளை வரைபடமாக்கி வைத்திருக்க வேண்டும். விபத்து ஏற்படும்போது கூச்சலிட்டோ, விசில் அடித்தோ, சுவர்களில் தட்டியோ அனைவரையும் உஷார்படுத்த வேண்டும்.

விபத்து ஏற்படும்போது துணிகளை எடுத்தல், செல்ல பிராணிகளைத் தேடுதல், விலை உயர்ந்த பொருள்களை தேடுதல் போன்றவற்றைச் செய்யாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். நிலநடுக்கம் ஏற்படும் போது வீட்டிற்கு வெளியில் இருந்தால் செங்கற்கள், சுவர்பூச்சு, தொங்கும் விளம்பரப் பலகைகள், பாலங்கள், தலைக்குமேல் செல்லும் மின்கம்பிகள் மற்றும் பிற கட்டட இடிபாடுகளிடமிருந்து விலகி, வெட்ட வெளிக்குச் செல்ல வேண்டும்.

பாதுகாப்பாக கட்டப்பட்ட கட்டடத்தில் இருந்தால் அங்கேயே இருக்க வேண்டும். நிலநடுக்க அசைவின்போது கட்டடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம். சூறாவளி ஏற்படும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு நிறுவனம் அறிவுறுத்தும் வரை, சூறாவளியின்போது வெளியில் செல்லாமல் பாதுகாப்பான கட்டடங்களில் தங்கி இருக்க வேண்டும்.

குடியிருப்பின் மேல்மாடிகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்க வேண்டும். தளப்பகுதியின் அருகிலேயே தங்கியிருக்கவும். பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களிலோ மரத்தின் அருகிலோ தஞ்சமடைவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பானது என அறிவிக்கப்படும் வரை வெளியில் செல்லக் கூடாது. துண்டித்து விழுந்த மின் கம்பிகள், பழுதுபட்ட பாலங்கள், கட்டடங்கள், மரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.

வடகிழக்கு பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில் சேலம் மாவட்டத்தில் அவசர உதவிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் 24x7 இயங்கிவரும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 , 0427 - 2452202 என்ற தொலைபேசி எண்ணிற்கு உடனுக்குடன் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆவின் பண்டிகை கால சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.