ETV Bharat / state

சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 2 மாணவர்கள் தப்பி ஓட்டம்.. போலீஸ் தீவிர விசாரணை! - சிறார் கூர்நோக்கு இல்லம்

ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து தப்பி ஓடிய இரண்டு மாணவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

two students run away
சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 2 மாணவர்கள் தப்பி ஓட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 10:49 PM IST

ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் சமூக நலத்துறையின் கீழ் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுவர்கள், சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சிறுவர்கள் உள்ளிட்ட பலதரப்பு சிறுவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இங்கு தங்கி பயின்று வருகின்றனர்.

சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்பிற்காக மாணவர்கள் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளியை நாடி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று (ஆக.29) காலை 11 ஆம் வகுப்பு மாணவன் இல்லத்தில் இருந்து பள்ளிக்குச் சென்றான். அந்த மாணவன் மாலையில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்திற்கு திரும்பவில்லை. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், மாணவன் வராத காரணத்தினால் அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோமதி மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத காரணத்தினால் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை காவல் துறையினர் சிறுவனை தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, நேற்று முன்தினம் (ஆக.28) காலையில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து பள்ளிக்குச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாலையில் காப்பகத்திற்கு திரும்பாமல் தப்பி ஓடியுள்ளார். கடந்த இரண்டு தினங்களில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Seeman: 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரம்.. மனம் திறந்த சீமான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.