ETV Bharat / state

மின்சாரத்தை துண்டித்து ஆட்டோ, சுமோ வண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: தீவிர விசாரணையில் காவல்துறை..! - strangers set fire in tata sumo

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நள்ளிரவில் மின்சாரம் துண்டித்து வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் டாடா சுமோவை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆட்டோக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 4:18 PM IST

Updated : Dec 25, 2023, 5:07 PM IST

மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆட்டோக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூதூர் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவபாதம்(42). ஆட்டோ ஓட்டுநரான சிவபாதம் அவரது மனைவியுடன் நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (டிச.24) இரவு வழக்கம் போல் அவரது வீட்டின் முன்பாக ஆட்டோவை நிறுத்தி வைத்துள்ளார். மேலும், அவரது சொந்த உபயோகத்திற்காக வாங்கப்பட்ட டாடா சுமோவை வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார்.

இதையடுத்து, இரவு 11மணி அளவில் அதேபகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிவபாதம் வீட்டின் கதவைத் தட்டி ஆட்டோ தீ பற்றி எரிவதாகத் தெரிவித்தார். இதில், அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்த சிவபாதம் அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஆட்டோவில் பற்றி எரிந்த தீயைத் தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதற்கிடையில் வீட்டருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோவும் தீ பற்றி எரிந்துள்ளது. தீயை அணைக்க முயற்சி செய்தும் தீயை அணைக்க முடியாததால், அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு டாடா சுமோ முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மரம் நபர்கள் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உணர்ந்து சிவபாதம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஆட்டோ மற்றும் டாடா சுமோவுக்கு தீ வைப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மாரில் மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். இதனால், இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளனர். அதைத்தொடர்ந்து இன்று (டிச.25) காலையில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டது.

இந்தச்சம்பவம் குறித்து, அரக்கோணம் தாலுகா போலீசாரிடம் சிவபாதம் புகார் கொடுத்ததன் அடிப்படையில், சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும், சிவபாதம் அளித்த புகார் மனுவில் சந்தேகப்படும் படியாக மூன்று பேரின் பெயர் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மூன்று பேரின் செல்போன் எண்ணின் விவரங்களை போலீசார் ஆராய்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதே நேரம், ஆட்டோவில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான சாட்சியமாகப் பாட்டில் ஒன்று ஆட்டோ அருகில் இருந்ததை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது காவல் துறையினருக்குக் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் உள்ளூர் வாலிபர்கள் சிலரும் இந்தக்குற்றத்திற்குத் துணை சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை அமலாக்கத்துறை அலுவலக பணியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!

Last Updated : Dec 25, 2023, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.