ETV Bharat / state

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே வழி தவறி கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.

கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு

author img

By

Published : Mar 18, 2020, 12:06 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்ஆவதம் கிராமம் அருகே உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், வழி தவறி வந்த இரண்டு வயது புள்ளிமான் விழுந்து தண்ணிரில் தத்தளித்துள்ளது.

இதனை பார்த்த விவசாய தொழிலாளர்கள், உடனடியாக அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து மானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி கிணற்றில் விழுந்த புள்ளிமானை கிராம மக்கள் உதவியுடன் மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை வனத்துறையினர், சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்கப்பட்ட புள்ளிமானுக்கு கால்நடை மருத்துவர் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு, வனத்துறையினர் உதவியுடன் அருகிலுள்ள பாணாவரம் காப்புக்காட்டில் விடப்பட்டது.

வழித்தவறி கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது

பாணாவரம் காப்புக்காட்டிலிருந்து குடிநீர் தேடி வந்த மான் வழி தவறி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வார காலத்தில் அரக்கோணம் பகுதியில் நான்கு மான்கள் வழி தவறி வந்தன. இதில் இரண்டு மான்கள் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டன. ஒன்று ரயிலில் சிக்கியும், மற்றொன்று மூள்வேலியில் சிக்கி நாய்கள் கடித்து இறந்தன. காப்புக்காட்டில் குடிநீரின்றி தவிக்கும் மான்களுக்கு அரசு குடிநீர் வசதி ஏற்படுத்தி, வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.