ETV Bharat / state

"பொங்கல் பரிசில் தேங்காய் கொடுங்க" இளநீரில் ஸ்டிக்கர் ஒட்டி பாஜக போராட்டம்! - பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வரும் நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் சேர்த்து வழங்க வேண்டும் என பாஜக விவசாய அணி சார்பில் ராணிப்பேட்டையில் நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.

தேங்காயில் தாமரை ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக
தேங்காயில் தாமரை ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக
author img

By

Published : Jan 6, 2023, 11:22 AM IST

தேங்காயில் தாமரை ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக

ராணிப்பேட்டை: முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட பாஜக விவசாய அணியின் சார்பில் 3000 தேங்காய்களில் பாஜக சின்னமான தாமரை ஸ்டிக்கரை ஒட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் பரிசுதொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கினால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும், அதே போல பாமாயிலுக்கு மாற்றாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்கினால் தாய்ப்பாலுக்கு இணையான சத்து கிடைப்பதோடு நோய் இல்லாத வாழ்க்கை உருவாகும் என்று விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட பாஜக விவசாய அணியின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் 3000 தேங்காய்களை கொண்டு வந்து அதில் பாஜக சின்னமான தாமரை ஸ்டிக்கரை ஒட்டி அதனை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேங்காயில் தாமரை ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டிருந்த போது வாலாஜாப்பேட்டையை சேர்ந்த சிவகாமி என்ற பெண் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த ராணிப்பேட்டை நகர போலீசார் அந்த பெண்ணை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: ஐஸ்கிரீமில் நெளிந்த புழுக்கள்.. ஆற்காடு அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.