ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், நேற்றைய தினம் (ஏப்ரல் 7) வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆட்சியர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஆட்சியர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!