ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனம் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்பாடு செய்த மன நோயாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், உள் நோயாளிகளுக்கான நவீன படுக்கையறை வசதிகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி பங்கேற்று திறந்துவைத்தார்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என்பதால் நூற்றுக்கணக்கான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் புனரமைக்கப்பட்ட கட்டடங்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நவீன படுக்கையறை வசதிகள், மனநோயாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை ஆட்சியர் திறந்துவைத்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்க வந்தவரின் செல்போன் திருட்டு