ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அருள். இவரின் மனைவி பரிமளா. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகன் ராகவேந்திரா (வயது 13). இந்த சிறுவன் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு 9 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது விபத்தில் சிக்கி சிறுவன் பலத்த காயமடைந்து உள்ளான்.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக, கடந்த 19ஆம் தேதி அதிகாலை வேலூர் CMC தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டு உள்ளான். தொடர்ந்து 10 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சிறுவன் இன்று (நவ. 29) மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தான்.
இதனை அடுத்து சிறுவனின் பெற்றோரும், குடும்பத்தினரும் முன் வந்து சிறுவனின் உடல் உறுப்புக்களைத் தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர். பின்னர், சிறுவனின் இருதயமும், நுரையீரலும் சென்னை MGM மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் CMC மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் அப்பல்லோ மருத்துவமனைக்கும் அனுப்பட்டு அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டன. இதன் மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக CMC மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெண்ணிடம் அத்துமீறிய கந்து வட்டி கும்பல்.. கரூரில் மீண்டும் பகீர் சம்பவம்.. பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் பேட்டி