கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையே நாளை (டிச.04) புரெவி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இன்று தென்னிந்திய பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இது குறித்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு வெள்ள மீட்பு உபகரணங்கள், மரம் வெட்டும் இயந்திரங்கள், செயற்கைக்கோள், தொலைத்தொடர்பு கருவிகளுடன் கூடிய 27 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், மதுரை, சென்னை ஆகிய இடங்களுக்கு 17 குழுக்களும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிக்கு 1 குழுவும், கேரள மாநிலம் திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம், பட்டனந்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு 8 குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து புரெவி புயல் நிலவரத்தை 24 மணி நேரமும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணித்து வருகின்றனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புரெவி புயல் எச்சரிக்கை: 4 விமானங்கள் ரத்து