ETV Bharat / state

பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்!

ராணிப்பேட்டை: தொடர் விபத்து பகுதியான சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

ராணிப்பேட்டை பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து  ராணிப்பேட்டை லாரி விபத்து  பேருந்து விபத்து  பயணிகள் உயிர் தப்பிப்பு  Passenger survival  Bus Accident  Lorry Accident  Freight truck collides with bus in ranipet
Loryy And Bus Accident In Ranipet
author img

By

Published : Dec 1, 2020, 3:19 PM IST

சென்னையிலிருந்து வேலூர் நோக்கிச் சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, வேலூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளது.

திடீரென சரக்கு லாரி பேருந்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து எதிரே வந்த கார் மீது மோதியது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து நடந்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் குறுக்கே மாடு வந்ததால் இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.