ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன், கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சித்ரா மற்றும் மணிமேகலை என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதோடு மணிமேகலை 5 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளமுள்வாடி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா இறப்பிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தன்னுடைய குடும்பத்துடன் மகாதேவன் சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர்ர் மது போதையில் இறப்பு நடந்த இடத்தில், தாறுமாறாக இருசக்கர வானத்தை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இதனை மகாதேவன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது கமலக்கண்ணனுக்கும் மகாதேவனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த பொது மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். பின்னர் கலகண்ணன் ஓட்டலில் சர்வர் வேலை செய்து வருவதால் சம்பவம் நடந்த மறுதினமே வேலைக்கு சென்னைக்கு சென்று விடுகிறார். இந்த நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உட்பட தொடர் விடுமுறை என்பதால் நேற்று இரவு (அக்.22) சென்னையில் இருந்து கமலக்கண்ணன் வந்துள்ளார்.
இதை அறிந்த மகாதேவன் மதுபோதையில் கமலக்கண்ணன் வீட்டுக்கு சென்று தகராரில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கமலக்கண்ணன் அப்பா பாலு என்பவர் எப்பாவோ நடந்த பிரச்சனைக்கு இப்போது ஏன் வந்து சண்ட இழுக்கிற என கேட்டபோது,மகாதேவன் பாலுவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து கமலக்கண்ணன், மகாதேவனை சராமாரிய தாக்கியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்த மகாதேவனை அங்கிருந்த அங்கம் பக்கத்தினர் மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மகாதேவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கலவை காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக பாலு மற்றும் கமலக்கண்ணன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகறாரில் கூலி தொழிலாளியை அடுத்து கொலை செய்த சம்பவத்தில் தந்தை மகன் கைது செய்யப்பட்டு இருப்பது, இராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சானிடரி நாப்கினில் கடத்தி வரப்பட்ட 612 கிராம் தங்கம் பறிமுதல் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!