ETV Bharat / state

அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் ஆணிடம் 5 சவரன் நகை பறிப்பு!

Arakkonam railway Station: அரக்கோணம் அருகே மின்சார ரயிலில் பயணம் செய்த நபரிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

jewels-stolen-from-a-electric-train-running-near-arakkonam
அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் ஆணிடம் 5 சவரன் நகை பறிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 11:18 AM IST

ஓடும் ரயிலில் ஆணிடம் 5 சவரன் நகை பறிப்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமம், போலாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்(33). இவர் அம்பத்தூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஹேமமாலினி( 29).

கருத்தரித்தல் சிகிச்சைக்காக வினோத் மற்றும் அவரது மனைவி ஹேமமாலினி ஆகியோர் நேற்று(டிச.26) ஆவடி சென்று விட்டு அங்கிருந்து மின்சார ரயிலில் அரக்கோணத்திற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த மின்சார ரயில் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று மீண்டும் புறப்பட்டது.

அப்போது வினோத் அருகில் இருந்த இளைஞர் ஒருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு கீழே இறங்கி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து கொள்ளையனை பிடிக்க முற்பட்டார். இதை பார்த்து ஹேமமாலினி செய்வதறியாது ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதனால் ஹேமமாலினிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் செயின் பறித்த கொள்ளையன் புளியமங்கலம் அரசு ஐடிஐ காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்து தப்பி ஓடினார். அப்போது வினோத்தும் காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்த போது அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் அங்கேயே கதறி துடித்தார். இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு சென்று சென்று விசாரணை நடத்தினார். மேலும் காயமடைந்த கணவன், மனைவி ஆகியோரை ரயில்வே போலீசார் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கு இடையே கொள்ளையன் வினோத்தின் கழுத்தில் இருந்த தங்க செயினை அறுக்கும்போது பாதி கொள்ளையன் கையிலும், மீதி செயின் ரயில் பெட்டியிலும் விழுந்து கிடந்தது.

இதையடுத்து சக பயணிகள் அறுந்து கிடந்த செயின் மற்றும் வினோத்தின் செல்போன், ஹேண்ட் பேக் ஆகியவற்றை பறிமுதல் செய்து ரயில்வே மேலாளரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் அரக்கோணம் ரயில் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பிரியாணி கடையில் பணிபுரிந்த பீகார் இளைஞர் மர்ம மரணம்.. நேபாள இளைஞரை தேடும் போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.