ETV Bharat / state

முறையாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - health workers protest against not being paid properly in ranipet

வாலாஜாபேட்டை நகராட்சியில் முறையாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

health workers protest  ranipettai health workers protest  ranipettai news  ranipettai latest news  protest  workers protest  ராணிபேட்டை செய்திகள்  தூய்மை பணியாளர்கள் போராட்டம்  முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்  ராணிபேட்டை தூய்மை பணியாளர்கள் போராட்டம்  வாலாஜாபேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்  போராட்டம்  health workers protest against not being paid properly in ranipet
நகராட்சியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம்
author img

By

Published : Jun 22, 2021, 9:55 AM IST

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை நகராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்காததைக் கண்டித்து, நகராட்சியில் பணியாற்றிவரும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் இணைந்து நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து நகராட்சிப் பணியாளர்கள் தெரிவித்ததாவது, “எங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியமானது முறையாக வழங்கப்படவில்லை. நகராட்சியில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு முகக்கவசம் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பான உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் எடுக்கப்படுகின்ற பி.எஃ.ப். (PF), இ.எஸ்.ஐ. (ESI) பிடிப்புத்தொகை போன்ற பணியாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்படுகின்ற தொகையானது முறையாக வங்கியில் செலுத்தப்படவில்லை” என்றனர்.

மேலும் நகராட்சியில் தற்காலிகப் பணியாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, நகராட்சியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து நேற்று (ஜூன் 21) தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: அரசியல் ஆடுபுலி ஆட்டம்: தேசியளவில் எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் சரத் பவார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.