ETV Bharat / state

'வக்பு வாரிய சொத்துகளை இந்துக்கள் ஆக்கிரமித்திருந்தால் அதனை மீட்டு அவர்களிடம் ஒப்படைப்பேன்' - எச்.ராஜா - பாஜக மூத்த தலைவர்

’வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை இந்துக்கள் ஆக்கிரமித்திருந்தால் அதனை மீட்டு இஸ்லாமியர்களுக்கு வழங்குவேன்’ என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ராணிப்பேட்டையில் விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எச்.ராஜா பங்கேற்பு

author img

By

Published : Feb 24, 2023, 10:28 PM IST

ராணிப்பேட்டையில் விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எச்.ராஜா பங்கேற்பு

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசுகையில், 'ஆற்காடு அடுத்த வேப்பூரில் பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த 8 ஏக்கர் நிலத்தை, வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்கியது.

இது தொடர்பான பிரச்சனை நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இன்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்பு பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திருச்சி அடுத்த திருச்செந்துறையில் கிராமமே வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினர்.

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஆதித்த கரிகாலன் யார் என்பது தற்போது மக்களுக்கு தெரிவதாகவும், அந்தப் படத்தில் வயதான காலத்தில் சிறிய பெண்ணை கட்டியவரின் பேச்சை ஒருபோதும் கேட்காதே என்ற வசனம் ஈ.வெ.ரா-வை குறிப்பிட்டு எழுதியுள்ளதாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வேப்பூரில் 8 ஏக்கர் நிலம் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் பட்டா மற்றும் அ - பதிவேடு ஆகியவை விவசாயிகளின் பெயரில் உள்ள நிலையில், முறைகேடாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடத்தை மீட்டு இஸ்லாமியர்களிடம் முறைகேடாக ஒப்படைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர் இதனை செய்த ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சிறையிலடைக்க வேண்டும் எனப் பேசினார்.

திருச்சி அடுத்த திருச்செந்துறை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தவர்களின் நிலத்தை வக்பு வாரியம் ஆக்கிரமிக்க முயற்சித்தபோது தீய சக்தியான திருமாவளவன் அதற்காக குரல் கொடுக்கவில்லை எனவும், அரசியல் கலெக்ஷன் மற்றும் கமிஷனை குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்கள் பொதுமக்களின் பிரச்னையை கண்டுகொள்ள மாட்டார்கள் எனப் பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் திமுகவின் மாலிகாப்பூர் ஆட்சிக்கு எதிரான ஒரு தர்மயுத்தம் நடைபெற்று வருவதாகவும், இந்துக்கள் தங்களின் நிலத்தை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒரு அங்குலம் இந்துக்களின் நிலம் கூட வக்பு வாரியத்தால் ஆக்கிரமிக்க விடமாட்டேன் என கூறிய அவர், வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை இந்துக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தால், அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் நானே தலையிட்டு அந்த நிலத்தை மீட்டு வக்பு வாரியத்திடம் ஒப்படைப்பேன் என கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கில் இதுவரை என்னென்ன பறிமுதல்? - சத்ய பிரதா சாகு வெளியிட்ட தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.