ETV Bharat / state

ஒரே நாளில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது! - Arrested under the Prevention of Thugs Act

ராணிப்பேட்டை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நான்கு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே நாளில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது !

author img

By

Published : Feb 3, 2021, 6:59 PM IST

ராணிப்பேட்டை மாவட்ட கலவை, அரக்கோணம், ஆற்காடு காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பரிந்துரைத்தார்.

அவரின் பரிந்துரையின்படி, பள்ளியான்குப்பத்தைச் சேர்ந்த ரவி(50) மற்றும் மகேஷ் (33), கலவை காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலாஜாவை சேர்ந்த முருகன்(52), ஆற்காட்டை சேர்ந்த அஜய்(19) ஆகிய நான்கு பேரையும் நேற்று (பிப். 02) குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து நால்வரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:மனைவியைச் சேர்த்துவைக்கக் கோரி கணவர் தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.